ஆலடி அருகேமூதாட்டியை தாக்கி, வீட்டை சூறையாடிய 2 பெண்கள் மீது வழக்கு
ஆலடி அருகே மூதாட்டியை தாக்கி, வீட்டை சூறையாடிய 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
விருத்தாசலம்,
ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ராஜேஸ்வரி (வயது. 65). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி ராஜேஸ்வரி என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த கே.ராஜேஸ்வரி தனது ஆதரவாளரான சேட்டு மனைவி அம்சவள்ளியுடன் சேர்ந்து எஸ். ராஜேஸ்வரியை ஆபாசமாக திட்டி தாக்கி, அவரது வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்களை சூறையாடிதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கலியமூர்த்தி மனைவி ராஜேஸ்வரி, அம்சவள்ளி ஆகியோர் மீது ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story