சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் மீது வழக்கு
சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கரூர் மாவட்டம், நடையனூர் அருகே உள்ள இளங்கோ நகர் குடியிருப்பு பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த சித்ரா, செல்வி, தனம், சாந்தி, தேவி, ராஜேஸ்வரி, ராஜலட்சுமி, பேபி, சோலையம்மாள், சங்கீதா, சத்யா, ராஜேஸ்வரி, யசோதா, பத்மா, ராணி உள்பட 20 பெண்கள் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story