போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்கு
x

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதி மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஷாஹிரா பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதிகளில் போலீசார் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றதாக 25 பேர் மீதும், ஹெல்மெட் இல்லாமல் சென்ற 120 பேர் மீதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்றது உள்பட மொத்தம் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story