23 கைதிகள் மீது வழக்கு
சிறையில் ரகளை செய்த 23 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் சிறையில் கைதிகள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே உடனடி நடவடிக்கையாக கைதிகள் பலர், மதுரை, திருச்சி மத்திய சிறைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்தநிலையில், கைதிகள் ரகளை தொடர்பாக விருதுநகர் சிறை அதிகாரி ரமா பிரபா, விருதுநகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரில், கைதிகள் விருதுநகர் சிறையில் ரகளை செய்த சம்பவத்தில், சக கைதிகள் அகமது எலிமுதீன், சரவணகுமார், சங்கிலிக்காளை ஆகிய 3 பேரை தாக்கியுள்ளனர். 12 மின்விசிறிகள் மற்றும் 6 மின்விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், கைதிகள் வடிவேல் முருகன், கண்ணன், மலைக்கண்ணன், முத்துப்பாண்டி, முத்தழகு அருண்பாண்டியன், பாண்டியராஜன், முத்துகிருஷ்ணன், ராமன், சிவா உள்பட 23 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.