டீ கடை உரிமையாளரை தாக்கிய 25 பேர் மீது வழக்கு
டீ கடை உரிமையாளரை தாக்கிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 31). இவர் விருத்தாசலம் பஸ் நிலையம் அருகில் டீ கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று, இவரது டீ கடைக்கு வந்த விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா, குட்டி, சபரி, துரை ஆகியோர் டீ குடித்துவிட்டு, சிகரெட் கேட்டனர். அப்போது பிரேம்குமார் சிகரெட் இல்லை என கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜா, குட்டி, சபரி, துரை மற்றும் 21 பேர் பிரேம்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் கடையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் முத்துராஜா, குட்டி உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story