அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
தமிழக சட்டசபையில் கவர்னர் உரையை கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 பேர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் குளித்தலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story