3 நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு
பண மோசடி புகார் தொடர்பாக 3 நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
திருநெல்வேலி
நெல்லையில் இயங்கி வந்த "ப்ளூ மேக்ஸ் கேப்பிட்டல் சொல்யூஷன்" என்ற நிறுவனத்தில் மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் செலுத்திய பணம் மோசடி செய்யப்பட்டதாக நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் "ஏ.ஜி.எஸ். வெல்த் கார்ப்பரேஷன்" என்ற நிறுவனத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த அன்வர் காதர் மைதீன் என்பவர் செலுத்திய பணம் மோசடி செய்யப்பட்டதாகவும், அம்பையில் இயங்கி வந்த "எஸ்.பின் அண்ட் இன்வெஸ்ட்" என்ற நிறுவனத்தில் நெல்லையை சேர்ந்த ராமநாதன் என்பவர் செலுத்திய பணம் மோசடி செய்யப்பட்டதாகவும் நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த 3 நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story