முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு


முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு
x

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் நாகமணி(வயது 61). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் கணேசன் மகன் சேகர் என்பவருக்கும் கிணற்றில் இருந்து நிலத்துக்கு தண்ணீர் இறைப்பது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை கிணற்றில் இருந்து நாகமணி அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது, அவரை அங்கு வந்த சேகர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து நாகமணி கொடுத்த புகாரின் பேரில் சேகர், பார்த்தீபன், கணேசன் மனைவி மல்லிகா ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story