அனுமதியின்றி லாரியில் செம்மண் ஏற்றிய 3 பேர் மீது வழக்கு
அனுமதியின்றி லாரியில் செம்மண் ஏற்றிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
காட்டுப்புத்தூர்:
காட்டுப்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்புத்தூர் அருகே உள்ள சூரம்பட்டியில் செம்மண்ணை அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் ஏற்றிய கிடாரத்தை சேர்ந்த வெங்கடாசலம்(வயது 40), மோகனூரை சேர்ந்த சரவணன்(40), அதே ஊரை சேர்ந்த ரஞ்சித்(35) ஆகிய 3 பேரும் போலீசாரை கண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story