தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் அருகே வாலிபரை தாக்கியதாக தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது ஆலங்குளம். இந்த ஊரை சேர்ந்தவர் பூமிநாதன் மகன் முனிபிரகாஷ் (வயது22). இவர் தான் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு சென்று தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராமநாதபுரம் தீயணைப்பு வீரர் முகேஷ்கண்ணன் (24) மற்றும் சகாயம் மகன் கனகராஜ் (35), ராமசாமி மகன் ராஜகருங்கு (27) ஆகியோர் ஊர் சங்க கணக்கு நோட்டை கேட்டார்களாம். அதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு முனிபிரகாஷை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி கம்பால் அடித்து செங்கலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முனிபிரகாஷ் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீயணைப்பு வீரர் முகேஷ்கண்ணன் உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.