கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Jun 2023 8:33 PM IST (Updated: 11 Jun 2023 7:23 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சங்கரபட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 26). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பஞ்சவர்ணம் (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்தநிலையில் 10 பவுன் நகை, ரூ.1 லட்சம் வரதட்சணை கேட்டு வீரபாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பஞ்சவர்ணத்தை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை வாங்கி வரச்சொல்லி, நிலக்கோட்டை அருகே உள்ள செக்காபட்டிக்கு பஞ்சவர்ணத்தை விரட்டினர்.

இதுதொடர்பாக நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பஞ்சவர்ணம் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நல்லக்கண்ணன், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து புகார் கூறப்பட்ட வீரபாண்டி, தாயார் ராமுத்தாய் (56), தங்கை கோகிலா (25) ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story