நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய தாய் உள்பட 3 பேர் மீது வழக்கு


நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய தாய் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

நிலத்தகராறில் விவசாயியை தாக்கிய தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் அலக்ஸாண்டர் (வயது 40), விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பிகளான ரட்சகர் (31), நெப்போலியன் (25) ஆகியோருக்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அலக்ஸாண்டருக்கும், ரட்சகருக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவரது தம்பிகள் ரட்சகர், நெப்போலியன் மற்றும் அவரது தாய் அலங்காரமேரி ஆகியோர் சேர்ந்து அலக்ஸாண்டரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அலக்ஸாண்டர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ரட்சகர், நெப்போலியன், அலங்கார மேரி ஆகியோர் மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story