தம்பதியை தாக்கிய ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு


தம்பதியை தாக்கிய ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

காட்டுமன்னார்கோவில் அருகே தம்பதியை தாக்கிய ஊராட்சி செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே மோவூர் ஊராட்சி் செயலாளராக பணியாற்றி வருபவர் நாராயணசாமி (வயது 42). சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது, மோவூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி ஆனந்தி ஆகிய 2 பேரும் அரசு வீடு ஒதுக்கீடு சம்பந்தமாக கேட்டு அவரிடம் தகராறு செய்து தாக்கி மிரட்டியதாக தெரிகிறது.. இது பற்றிய புகாரின் பேரில் ஏற்கனவே தம்பதி மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், தங்களிடம் வாங்கிய சிமெண்டு மூட்டைகளை ரவி, அவரது மனைவி ஆகிய 2 பேரும் ஊராட்சி செயலாளர் நாராயணசாமியிடம் கேட்டனர். ஆனால் அவர் கொடுக்காமல், ரவி, அவரது மனைவி ஆனந்தியை அவரது சகோதரர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து திட்டி தாக்கி மிரட்டினார்.

இது பற்றி ரவி காட்டுமன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நாராயணசாமி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story