பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு


பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு
x

பெண் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் ராஜ். இவர் தலையாரி வேலைக்கு தயாராகி வந்துள்ளார். இந்தநிலையில் சுந்தரகோபி என்பவர் தனக்கு தெரிந்த நரிக்குடியை சேர்ந்த அரசியல் பிரமுகர் விஜயலட்சுமி உள்ளதாகவும், அவரிடம் பணம் கொடுத்து வேலை வாங்கி விடலாம் எனவும் ராஜிடம் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அவர் தனக்கும், தன்னுடைய மனைவியின் சகோதரி கார்த்திகா என்பவருக்கும் வேலை வாங்குவதற்காக ரூ.9½ லட்சத்தை விஜயலட்சுமி, சுந்தரகோபி மற்றும் அவரது தந்தை முருகனிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. ஆதலால் பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு அவர்கள் 3 ேபரும் ராஜிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜ், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவுப்படி சுந்தரகோபி, விஜயலட்சுமி, முருகன் ஆகிய 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story