பள்ளி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


பள்ளி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 Oct 2022 1:00 AM IST (Updated: 17 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

ஏற்காடு பட்டிபாடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கலையரசன். இவர் ஏற்காட்டில் முருகன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையில் பள்ளியை விட்டு வெளியே வந்த போது, அந்த பகுதியை சேர்ந்த அஸ்வின், ராகேஷ் மற்றும் சாய் ஆகிய 3 பேரும் ஒன்றாக சேர்ந்து மாணவரை தாக்கி உள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் ஏற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தாக்குதலில் காயம் அடைந்த அந்த மாணவரை மீட்டு ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மாணவர் கொடுத்த புகாரின் பேரில், அஸ்வின், ராகேஷ், சாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story