தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி பேரூர் உடையாபட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுகுமாறன் என்பவருக்கும் பாதை சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விேராதம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கருப்பையா தனது மனைவி சுதாவுடன் வீட்டில் இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சுகுமாறன், அவரது தம்பி இளமாறன், உறவினர் பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக கருப்பையா, சுதாவை குச்சியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் காயம் அடைந்த கருப்பையா-சுதா தம்பதியினர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கருப்பையா கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் சுகுமாறன், இளமாறன், பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story