பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் கொட்டில்பாறை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவரது மனைவி வளர்மதி (வயது 42). இவரது மகன் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள நிலத்தின் வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி மற்றும் அவரது குடும்பத்தார் திட்டி உள்ளனர். இதுகுறித்து கேட்ட வளர்மதியை பழனியாண்டி, அவரது மனைவி முத்துலட்சுமி, மகன் கார்த்தி ஆகியோர் திட்டி தாக்கியுள்ளனர். இந்த தகராறு தொடர்பாக வளர்மதி அளித்த புகாரின் பேரில் பழனியாண்டி, முத்துலட்சுமி, கார்த்தி ஆகிய 3 பேர்மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story