பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x

விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய 3 பேர் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

முன்விரோதம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மு.புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது 48). அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). உறவினர்களான இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று ராஜாமணி அப்பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு ஆடுகளுக்கு தழை வெட்டுவதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினர்களான ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து ராஜாமணியிடம் தழை வெட்டக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

3 பேர் மீது வழக்கு

அப்போது, ராஜாமணி என்னுடைய இடத்தில் உள்ள மரத்தில் நான் தழை வெட்டுகிறேன். நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் ராஜாமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த ராஜாமணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜாமணி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜாமணி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன், பெண்ணை தாக்கிய கோவிந்தராஜ், ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story