விருத்தாசலம் அருகே பரபரப்பு ஓட்டலை சூறையாடிய 3 பேர் மீது வழக்கு


விருத்தாசலம் அருகே பரபரப்பு    ஓட்டலை சூறையாடிய 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஓட்டலை சூறையாடிய பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடலூர்

கம்மாபுரம்,

டயர் பஞ்சர்

விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன் (வயது 40). அதேஊரில் உள்ள பஸ் நிறுத்ததில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேல், பழனி, கோபு ஆகியோர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை செந்தில்முருகன் ஓட்டல் முன்பு நிறுத்திச் சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் டயர் பஞ்சராகி இருந்தது.

ரகளை

ஓட்டல் உரிமையாளர் செந்தில்முருகன் தான் மோட்டார் சைக்கிளை பஞ்சராகி உள்ளார் என எண்ணிய பழனி உள்ளிட்ட 3 பேரும் ஓட்டல் உரிமையாளர் செந்தில்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை அசிங்கமாக திட்டி ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கி சூறையாடியதோடு, பாத்திரங்களில் இருந்த உணவுகளையும் கீழே கொட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செந்தில்முருகன் கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், பழனி, கோபு ஆகிய 3 பேர் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story