அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேர் மீது வழக்கு
அனுமதி இன்றி பட்டாசு தயாரித்த 3 பேர் மீது வழக்கு
விருதுநகர்
சாத்தூர்
சாத்தூர் அருகே மல்லையநாயக்கன்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி தகர செட்டு அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சமையனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சமையன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது தகர செட்டில் வைத்து சேகர், ராஜசேகர் மற்றும் ஆறுமுகசாமி ஆகிய 3 பேர் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸ் நிலையத்தில் சமையன் கொடுத்த புகாரின் பேரில் சேகர், பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜசேகர், போர்மேன் ஆறுமுகசாமி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் மற்றும் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருட்கள் அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story