கோழிப்பண்ணை உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு


கோழிப்பண்ணை உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x

கந்தர்வகோட்டை அருகே கோழிப்பண்ணை உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கோழிப்பண்ணை உரிமையாளர்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பஷீர் காலனியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 39). இவர் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவர் தனியாருக்கு சொந்தமான இறைச்சிக்கடை விற்பனை நிலையத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனது பண்ணையில் உள்ள கோழிகளை தருவதாக ஒப்பந்தம் செய்ததாகவும், பின்னர் ஒப்பந்தத்தை மீறி வேறு நபர்களிடம் கோழிகளை விற்றதாகவும் கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன இறைச்சிக்கடை விற்பனை நிலைய மேலாளர் ரமேஷிடம் ராஜதுரை தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

4 பேர் மீது வழக்கு

இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் மற்றும் அவரது நிறுவனத்தை சேர்ந்த மோகன், ஆண்டனி, புகழ் ஆகியோர் கட்டை மற்றும் இரும்பு கம்பிகளால் ராஜதுரையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்தகாயம் அடைந்த ராஜதுரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ராஜதுரை அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் ரமேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story