கடன் கொடுக்கல்-வாங்கல் தகராறில் 4 பேர் மீது வழக்கு


கடன் கொடுக்கல்-வாங்கல் தகராறில் 4 பேர் மீது வழக்கு
x

தா.பழூர் அருகே கடன் கொடுக்கல்-வாங்கல் தகராறில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் விஜய் (வயது 27). இவர் அதே பகுதியில் வசித்து வரும் சிவக்குமாரிடம் (35) கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், இதில் ரூ.6 ஆயிரத்தை திரும்ப கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை திரும்ப தருமாறு சிவக்குமார் விஜையிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சிவக்குமாரிடம் வாங்கிய கடனை திரும்ப கொடுத்து விட்டதாகவும், ஆனால் மேலும் அதிகமாக பணம் கேட்டு தன்னையும் தனது மனைவியையும் கடப்பாறையால் தாக்கியதாக தா.பழூர் போலீசில் விஜய் புகார் அளித்துள்ளார். அதுபோல் கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது தன்னை விஜய், அவரது தந்தை நாகராஜ் ஆகியோர் தாக்கியதாக சிவக்குமார் தா.பழூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விஜய் கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் மற்றும் அவருடன் இருந்த வைத்திலிங்கம் ஆகியோர் மீதும், சிவக்குமார் கொடுத்த புகாரில் நாகராஜ் மற்றும் அவரது மகன் விஜய் ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story