பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை தொடர்பாக கணவர், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை தொடர்பாக கணவர், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி
தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா (வயது 30). இவருக்கும் திருச்சி உறையூரை சேர்ந்த மூர்த்தி-மல்லிகா தம்பதியின் மகன் தினேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, கீர்த்திகாவின் பெற்றோர் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில் தினேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதலாக நகை, பணம் வரதட்சணையாக கேட்டு கீர்த்திகாவை கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கீர்த்திகா ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், தினேஷ், அவருடைய தாய், தந்தை மற்றும் சகோதரி திவ்யா ஆகியோர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story