மணல் அள்ளிய 4 பேர் மீது வழக்கு


மணல் அள்ளிய 4 பேர் மீது வழக்கு
x

மணல் அள்ளிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

கொள்ளிடக்கரை மேலூர் பகுதியில் திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி மணலை அள்ளி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த சுசீந்திரன் (வயது 29), ஞானசேகர் (42), விஜயராகவன் (40), முத்து ஆகியோரை அதிகாரிகள் பிடித்தனர். இது பற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் திருட்டிற்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் வாகனம் மற்றும் 3 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story