அதிகாரியை அரசு பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு


அதிகாரியை அரசு பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்கு
x

அதிகாரியை அரசு பணி செய்ய விடாமல் தடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் இந்நு சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்தநிலையில் உரிய அனுமதி பெறாமல் அதே பகுதியை சேர்ந்த குகன், சந்திரசேகர், பெரியசாமி, மற்றொரு பெரியசாமி ஆகியோர் சேர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி வேலைகளை செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த குளித்தலை வட்ட ஆய்வாளர் கனிகுமார் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்து ஆய்வு, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவிலுக்கு உரிய அனுமதி பெறாமல் எப்படி கட்டமைப்பில் மாற்றம் செய்யலாம் என்று கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குகன், சந்திரசேகர், பெரியசாமி, மற்றொரு பெரியசாமி ஆகியோர் சேர்ந்து கனிகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து உள்ளனர். இதுகுறித்து கனிகுமார் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் பிரபாகரன் குகன், சந்திரசேகர், பெரியசாமி, மற்றொரு பெரியசாமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story