மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு


மதுவிற்ற 4 பேர் மீது வழக்கு
x

மதுவிற்ற 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் ராயம்வரம், செங்கீரை, கே.புதுப்பட்டி, அரிமளம் ஆகிய ஊர்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதிகாலை நேரத்தில் டாஸ்மாக் மதுபானங்களை விற்றுக்கொண்டிருந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து 80 மது பாட்டில்கள் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை அரிமளம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story