தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு


தொழிலாளிக்கு கொலை  மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு
x

தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

லாலாபேட்டை அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 70). கூலி தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக உயர் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த ரங்கன் என்கிற வடமலை, அமிர்தம், பழனிச்சாமி, ஆனந்த் ஆகிய 4 பேரும் சேர்ந்து பழனியாண்டியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், லாலபேட்டை போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story