தலைகவசம் அணியாமல் சென்ற 4 பேர் மீது வழக்கு


தலைகவசம் அணியாமல் சென்ற 4 பேர் மீது வழக்கு
x

மதுரையில் மது குடித்தபடி மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணியாமல் சென்ற 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை அண்ணாநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் இளைஞர்கள் தலைகவசம் அணியாமல் மது குடித்தபடி எடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் 2 இளைஞர்கள் டாஸ்மாக் மது கடையில் பீர் பாட்டிலை வாங்கி கொண்டு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமருகிறார்கள். பின்னர் நண்பர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்ட தொடங்கியதும் பின்னல் அமர்ந்தவர்கள் வாகனத்தில் எழுந்து நின்று பீர்பாட்டிலை குடித்த படி சாலையில் சத்தம் போட்டு கொண்டு வேகமாக செல்கிறார்கள். அதை வீடியோவாக எடுத்து அதனை பாடலுடன் இணைத்து டிக்டாக் வெளியிட்டுள்ளனர். இது குறித்து தகவல் அண்ணாநகர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் வண்டி எண் மற்றும் அவர்கள் செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். அதில் ஒத்தக்கடை மிராஸ் நகர் 4-வது தெருவை சேர்ந்த சுலைமான் மகன் பாசில் (வயது 20), ஒத்தக்கடை காந்திநகர் லியாகத்அலி மகன் வாஹித்கான் (19), கருப்பாயூரணி பாரதிபுரம் 16-வது தெரு ரகுபதி மகன் பிரவீன் (21), கருப்பாயூரணி வடக்கு தெரு சந்திரன் மகன் யோகராம் (22) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story