ஒட்டகங்களை விற்பனைக்காக கொண்டு வந்த 4 பேர் மீது வழக்கு


ஒட்டகங்களை விற்பனைக்காக கொண்டு வந்த 4 பேர் மீது வழக்கு
x

ராஜஸ்தானில் இருந்து ஓசூருக்கு ஒட்டகங்களை விற்பனைக்காக கொண்டு வந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர் சுண்ணாம்பு ஜீபி பகுதியில் 18 ஒட்டங்கள் ராஜஸ்தானில் இருந்து இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் கொண்டு வந்துள்ளதாக புதுடெல்லியை சேர்ந்த விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த சஞ்சய் குல்கர்னி என்பவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த ஒட்டகங்களை மீட்டு பெங்களூருவில் கோசாலையில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த ஒட்டகங்கள் ராஜஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சஞ்சய் குல்கர்னி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கோவிந்தர் தவார் (வயது 35), கரன் ஜடாவ் (24), விஜய் சிந்து (31) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவன் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story