சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு


சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்கு
x

சாலை மறியல் செய்த 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர்

குளித்தலை ஒன்றியம், பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வரவில்லை எனக்கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலிக்குடங்களுடன் திருச்சாப்பூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சாலையை மறித்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்ததாக திருச்சாப்பூரை சேர்ந்த 40 பேர் மீது நேற்று குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story