பஸ் தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்கு; 2 பேர் கைது


பஸ் தினம் கொண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்கு; 2 பேர் கைது
x

ஆரணியில் பஸ் தினம் ெகாண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் பஸ் தினம் ெகாண்டாடிய 40 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பஸ் தினம்

செய்யாறு அரசு கலைக் கல்லூரிக்கு அரசு பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் ஆரணியில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்று படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி ஆரணியில் இருந்து கல்லூரிக்கு செல்லக்கூடிய கல்லூரி மாணவர்கள் தனியார் பஸ்சை வாடகைக்கு எடுத்துக்கொண்டு பஸ் தினம் (பஸ் டே) கொண்டாடிக் கொண்டு சென்றனர். அவர்களுடன் மினி வேனில் பேண்டு வாத்தியங்கள் சென்றதாக சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், அசோக்குமார், ஜெயபால் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

40 மாணவர்கள் மீது வழக்கு

சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை கொண்டு பெயர் தெரிந்த 10 கல்லூரி மாணவர்கள் உள்பட 40 மாணவர்கள் மீது 7 பிரிவுகளின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் பொதுமக்களை அச்சுறுத்த வகையில் சென்ற மினிவேன் டிரைவர் முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், தனியார் பஸ் டிரைவர் ஆரணி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்த தயாளன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து தனியார் பஸ் மற்றும் மினிவேனை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அபராதம்

மினிவேனுக்கு ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது,

தனியார் பஸ் சுற்றுலா பஸ் என்பதால் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story