போக்குவரத்து விதிகளை மீறிய 46 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 46 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறிய 46 பேர் மீது வழக்கு

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் மற்றும் ரோந்து பணி போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் குன்னூர் செல்லும் சாலைகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், பகல் நேரத்தில் கனரக வாகனங்களை இயக்கியவர்கள் என 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட வாகன தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story