போக்குவரத்து விதிமீறிய 48 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிமீறிய 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக செல்கிறது. இதனால் கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி தலைமையில் போலீசார் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை, குன்னூர் சாலையில் வாகன தணிக்கை மேற்க்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள், ஓட்டுனர் உரிமம், வாகனங்களின் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு மொத்தம் ரூ.45 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.