முன்விரோதத்தில் தகராறு: அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் மீது வழக்கு


முன்விரோதத்தில் தகராறு: அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

முன்விரோதத்தில் தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி நாகலூரை சேர்ந்தவர் ராஜா என்ற ராமகிருஷ்ணன் (வயது 42). இவருடைய தம்பி சேட்டு (40). இவர்கள் இருவரும் லாரி டிரைவர்கள். இவர்கள் கூட்டாக லாரி வைத்து தொழில் செய்து வந்தனர். இதில் முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 19-ந் தேதி மாலை இவர்களின் தாயார் லட்சுமி சேட்டு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா எனது வீட்டிலோ அல்லது தம்பி வீட்டிலோ இருக்க வேண்டாம், பொதுவாக வேறு ஒரு வீட்டில் இருங்கள் என்று தாயாரிடம் கூறி விட்டு சென்றதாக தெரிகிறது. இதையறிந்த சேட்டு அவருடைய அண்ணன் ராஜாவை அன்று மாலையில் தகாத வார்த்தையால் திட்டி கையில் வைத்திருந்த தடியால் அடித்து காயப்படுத்தி உள்ளார். அப்போது ராஜாவை உறவினர்கள் தமிழ்வாணன், வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாகவும், தோட்டத்தில் இருந்த வாழைமரங்களை வெட்டியதுடன், தொட்டியை சேதபடுத்தியதாகவும் ராஜா ஏ.பள்ளிபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சேட்டு, தமிழ்வாணன் (40), வெங்கடேஷ்(37), சந்தோஷ் (21) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேநேரத்தில், ராஜா மீது சேட்டு கொடுத்த புகாரில், அண்ணன் தன்னை தாக்கியதுடன், வாழை மரங்களை வெட்டி சாய்த்து விட்டதுடன், கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story