மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு


மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில் மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் வினேகா (வயது 31). இவருக்கும், சிவகாசியை சேர்ந்த ஹரிகர சுந்தரன் (37) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஹரிகரசுந்தரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு வினேகாவை துன்பறுத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார், ஹரிகரசுந்தரன் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story