சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி போலீஸ் சரகத்தை சேர்ந்த வெள்ளை பொட்டல் கிராமத்தில் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சாத்தையா, அவரது மனைவி வசந்த மாலா ஆகியோருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை அப்பகுதியை சேர்ந்த ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி ஆகியோருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தையா நத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராஜ முனியாண்டி, முத்துலட்சுமி, இவர்களுடைய மகன் முருகன், சார் பதிவாளர், பத்திர எழுத்தர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story