பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
தக்கலை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி
தக்கலை,
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் மற்றும் போலீசார் சம்பவத்தன்று மாலையில் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அவர்கள் கோழிப்போர்விளை பகுதியில் சென்ற போது சிலர் கூட்டமாக இருப்பதை கண்டு அவர்களை நோக்கி சென்றனர். போலீசார் வருவதை கண்டதும் அங்கிருந்த 4 பேர் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். விசாரணையில் பிடிபட்டவர் குழிக்கோடு பகுதியை சேர்ந்த பிரதீப் (வயது 31) என்பதும், இவர்கள் அனைவரும் பணம் வைத்து சீட்டு விளையாடி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சீட்டு கட்டு மற்றும் ரூ.100 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பிரதீப் மற்றும் தப்பி ஓடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் பிரதீப் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story