மரத்தடியில் பட்டாசு தயாரித்த 5 பேர் மீது வழக்கு


மரத்தடியில் பட்டாசு தயாரித்த 5 பேர் மீது வழக்கு
x

மரத்தடியில் பட்டாசு தயாரித்த 5 பேர் மீது வழக்குப்பதிவு ெசய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் இயங்கி வரும் ஒரு பட்டாசு ஆலையில் கிராம நிர்வாக அலுவலர் ரவிராஜன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அந்த பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் சிலர் மரத்தடியில் அமர்ந்து பட்டாசுகள் உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரவிராஜன் அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார், பட்டாசு ஆலை உரிமையாளர் அந்தோணியம்மாள், போர்மென் ரவிக்குமார், தொழிலாளர்கள் பால்ராஜ், சீனிவாசன், ஜீசஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story