மீன்கள் திருடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு
சூளாங்குறிச்சி அணையில் மீன்கள் திருடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் 5 பேர் மீது வழக்கு
சங்கராபுரம்
சங்கராபுரம் தாலுகா ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெபஸ்டியான் மகன் அந்தோணிசாமி(வயது 47). இவர் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சூளாங்குறிச்சி அணையில் மீன்களை வளர்த்து வரும் சங்க உறுப்பினர் ஆக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் மகேந்திரன் என்பவர் சூளாங்குறிச்சி அணையில் வலைவீசி மீன்களை பிடித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்து அங்கு வந்த அந்தோணிசாமி தட்டி கேட்டபோது மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவரை திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தோணிசாமி கொடுத்த புகாரின் பேரில் பரமநத்தம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், சேகர், முனியபிள்ளை, சுந்தரமூர்த்தி, பிரபு ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.