இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
சிறுமிக்கு திருமணம் நடத்திய இரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பொட்டிக்கான் பள்ளம் பகுதியை சேர்ந்த ராஜப்பனின் மகன் கார்த்திக் (வயது 24). இவருக்கும் வாணியம்பாடியை அடுத்த மிட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் 4.11.2022 அன்று இரு குடும்பத்தாரும் இணைந்து திருமணம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து வேலூர் குழந்தைகள் நல குழுவினருக்கு தகவல் தெரிய வந்தது. அதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல குழு அலுவலர் வேதநாயகம் நடவடிக்கை மேற்கொண்டு சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்.
பின்னர், இதுதொடர்பாக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கார்த்திக், அவரது தந்தை ராஜப்பன், தாயார் புஷ்பா, உறவினர் தனலட்சுமி, சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் இருகுடும்பத்தினபர் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story