தண்ணீர் இறைப்பதில் தகராறு 6 பேர் மீது வழக்கு


தண்ணீர் இறைப்பதில் தகராறு  6 பேர் மீது வழக்கு
x

பொது கிணற்றில் தண்ணீர் இறைப்பதில் தகராறு 6 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள பாசார் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் மருது பாண்டியன்(வயது 30), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி(42) என்பவருக்கும் பொது கிணற்றில் இருந்து நிலத்துக்கு தண்ணீர் இறைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மருதுபாண்டியன் பொதுகிணற்றில் இருந்து தனது வயலுக்கு குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் மருதுபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி, இவரது மகன் ஏழுமலை(18), மனைவி முனியம்மாள்(40) ஆகியோர் மீதும், கந்தசாமி கொடுத்த புகாரின் பேரில் அய்யப்பன் மகன் கோபி, முருகேசன் மகன் காசிமணி, சுப்பிரமணியன் மகன் மருதுபாண்டியன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story