இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு
மொய்ப்பணம் குறைவாக வைத்ததால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடலூர்
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புது இளவரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 49). இவரது வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதே ஊரை சேர்ந்த சிவகுருநாதன்(43) என்பவர் மொய் பணத்தை குறைவாக செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவகுருநாதன், அவரது தாய் சுசீலா, மனைவி மேனகா ஆகியோர் தனசேகரனை அசிங்கமாக திட்டி தாக்கினர். அதேபோல், தனசேகரன் ஆதரவாளர்களான கனகசபை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் சிவகுருநாதனை திட்டி தாக்கினர். இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேரில், இருதரப்பை சேர்ந்த தனசேகரன், சிவகுருநாதன் உள்ளிட்ட 6 பேர் மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story