பா.ஜ.க.வினர் 60 பேர் மீது வழக்கு


பா.ஜ.க.வினர் 60 பேர் மீது வழக்கு
x

பா.ஜ.க.வினர் 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 60 பேர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த தேசபந்து திடலில் கூடிய போது கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மேற்கு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் உள்பட 60 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Related Tags :
Next Story