நிலத்தகராறு 8 பேர் மீது வழக்கு


நிலத்தகராறு 8 பேர் மீது வழக்கு
x

பகண்டை கூட்டுரோடு அருகே நிலத்தகராறு 8 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

பகண்டை கூட்டுரோடு அருகே உள்ள இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல் மனைவி மாலா(வயது 50). இவர் சம்பவத்தன்று தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழுவதற்கு சென்றபோது அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் மாலா கொடுத்த புகாரின் பேரில் அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், ரமேஷ் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், மாலா, அமுதா, சண்முகப்பிரியா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story