கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு
ஆண்டிப்பட்டி அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவானந்தம் மகன் ரமேஷ் (வயது 29). இவருக்கும், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சங்கக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த வாசுகிதேவிக்கும் (26) கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ரமேஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். திருமணத்தின்போது, 41 பவுன் நகையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்களும், ரூ.3 லட்சமும் வரதட்சணை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரமேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினர், வாசுகிதேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து வாசுகிதேவி, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கணவர் ரமேஷ், மாமியார் ரஞ்சிதா, சின்னமாமியார் சுமதி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story