போக்குவரத்து விதிகளை மீறிய 98 பேர் மீது வழக்கு


போக்குவரத்து விதிகளை மீறிய 98 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து விதிகளை மீறிய 98 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் அதிக பாரம் ஏற்றி வந்த 5 லாரி ஓட்டுனர்களுக்கு மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கருப்பு கூலிங் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.5,100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மேற்கொண்ட வாகன சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.8,200 அபராதம் விதிக்கப்பட்டது. கோத்தகிரியில் நடந்த வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் 98 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.48 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.



Next Story