100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது வழக்கு
ஜோலார்பேட்டை அருகே 100 நாள் வேலை பணித்தள பொறுப்பாளரை திட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம், பழனி வட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமாவதி (வயது 35). இவர் அச்சமங்கலம் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணித்தள பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். கடந்த 17-ந் தேதி வேலை முடிந்ததும் ஹேமாவதி வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாக்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் என்பவர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து ஹேமாவதி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜீவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story