முன்னாள் அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது வழக்கு


முன்னாள் அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jan 2023 12:29 AM IST (Updated: 5 Jan 2023 12:46 PM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர்

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு தி.மு.க. அரசுக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்ததாகவும், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி குறித்த வீடியோக்களை வெளியிட்டு 2 கட்சிகளுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாகவும், தடை செய்யப்பட்ட விளம்பர பதாகை பயன்படுத்தியதாகவும் கிராம நிர்வாக அலுவலர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சின்னசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story