ஸ்ரீமுஷ்ணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது வழக்கு
ஸ்ரீமுஷ்ணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
கடலூர்
ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவனும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் 10-ம் வகுப்பு படித்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சிறுவன், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, பல முறை கட்டாயப்படுத்தி உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த மாணவிக்கு வயிறு வலி ஏற்பட்டது. உடன் அந்த மாணவி அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இது பற்றி டாக்டர்கள் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்த மாணவி அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story