தங்கையை தாக்கிய அண்ணன் மீது வழக்கு


தங்கையை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
x

ஓசூரில் குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தங்கையை தாக்கிய அண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பெங்களூரு அருகே எரண்டஅள்ளியை சேர்ந்தவர் காயத்ரி (வயது30). இவரது சகோதரர் சீனிவாச ரெட்டி (37). இவர் அத்திப்பள்ளியில் வசித்து வருகிறார். அண்ணன்- தங்கைக்கு இடையே குடும்ப சொத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக, சம்பவத்தன்று பாகலூர் அருகே சேவகானப்பள்ளியில் தனது தங்கையை, சீனிவாச ரெட்டி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து காயத்ரி பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story